பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டால் சொத்துக்கள் பறிமுதல்

Monday, May 8th, 2017

நாட்டில் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு குற்றவாளியாக அடையாளம் காணப்படுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதில் குற்றவாளிகளுக்கு 20 வருடங்களுக்கு குறையாமல் சிறைத்தண்டனை மற்றும் அவர்களின் சொத்துக்களும் அரசுடமையாக்குவதற்கான நடவடிக்கைகளையும் அரசாங்கம் பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் அறிவித்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க மற்றும் தொல்பொருள் பெறுமதியான இடங்களை அழிப்பது இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்த முயற்சிப்பது மற்றும் செயற்படுவது குற்றமாகும்.74 பக்கங்களை கொண்ட புதிய பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் அரசாங்க இரகசியங்களை வெளிப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில், கடத்தல் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை பயங்கரவாத குற்றங்களாகும்.

இந்த புதிய பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் பயங்கரவாத செயற்பாடுகளை விசாரிப்பதற்காக பொலிஸ் மா அதிபருடனான பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம் நிறுவ வேண்டும், அதற்கு விசேட விசாரணை குழு ஒன்றை உள்ளடக்க வேண்டும். இதற்கு மேலதிகமாக பயங்கரவாத செயற்பாடு தொடர்பில் கைது செய்யப்படுபவர்கள் குறித்து இந்த நாட்டு மனித உரிமை ஆணைக்குழுவில் உடனடியாக அறிவிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது

Related posts: