நோய் தொற்றை உருவாக்கும் நீர்வாழ் உயிரினத்தையும் நாட்டுக்கு கொண்டுவர தயாரில்லை – அமைச்சர் மகிந்த அமரவீர!

Thursday, April 12th, 2018

நோய் தொற்றுக்கும் காரணமாகும், நோய் தொற்றை உருவாக்கும் நீர்வாழ் உயிரினத்தையும் நாட்டுக்கு கொண்டுவர தயாரில்லை என்று மீன்பிடி மற்றும் நீர்வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இரண்டு நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்டுள்ள முறுகல் நிலை காரணமாக, தொற்றுநோயை உண்டுபண்ணும் இறால் இலங்கைக்கு கொண்டுவரப்படுவதாக பொய்யான வதந்தி பரப்பப்பட்டுள்ளது.

எயிட்ஸ் போன்ற நோய் தொற்றை உருவாக்கும் இறால்களை இலங்கைக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்படுகிறது. எந்தவகையிலும் இவ்வாறான பாதிப்புகளை ஏற்படுத்தும் இறாலையோ வேறு எதனையோ இலங்கைக்கு கொண்டுவர இடமளிக்கப்படமாட்டாது எனவும் அமைச்சர்மகிந்த அமரவீரமேலும் குறிப்பிட்டுள்ளார்

Related posts:

விமான நிலையங்களை மீள திறப்பது தொடர்பில் ஆராய விசேட குழு - இராஜாங்க அமைச்சர் டீ.வி. சானக தெரிவிப்பு!
கொழும்பு துறைமுக நகர விவகாரம்: மே 18 அல்லது 19 திகதிகளில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படும் – நிதி இ...
நெருக்கடியான தருணத்தில் இந்தியா அளப்பரிய உதவிகளை செய்து வருகின்றது – நாட்டில் டொலர் கையிருப்பு தொடர்...