இலங்கையின் சுகாதாரத்துறையை கட்டியெழுப்புவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவி!

Tuesday, August 24th, 2021

நாட்டின் சுகாதாரத்துறையினை கட்டியெழுப்புவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி, 50 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியினை வழங்கியுள்ளது.

அவற்றில் 37.5 மில்லியன் அமெரிக்க டொலரை கடனாகவும், 12.5 மில்லியன் அமெரிக்க டொலரை ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

நாடொன்றில் வெளிநாட்டு இருப்பை வலுப்படுத்த பயன்படுத்த கூடிய நிபந்தனையற்ற விசேட மீள்பெறுதல் உரிமைகளுக்காக சர்வதேச நாணய நிதியம் 650 பில்லியனை ஒதுக்கியுள்ளது.

இதனூடாக 816 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுக்கொள்ள இலங்கை தகுதி பெற்றுள்ளது.

எவ்வாறாயினும், வழங்கப்படும் நிதியினை உறுப்பு நாடுகள் சிறந்த முறையில் கையாள வேண்டும் என சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிரிஸ்ட்டினா ஜோர்ஜியா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அந்நிய செலாவணியின் கையிருப்பானது கடந்த மாத இறுதியில் 3.8 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: