நேர காலத்துடன் சென்று வாக்களியுங்கள்: தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் !

Saturday, February 10th, 2018

வாக்காளர்கள் வாக்குச்சீட்டின் குறிப்பிடப்பட்டுள்ள தாம் விரும்பிய கட்சி அல்லது சுயேச்சைக் குழுவின் சின்னத்துக்கு நேரே ஒரேயொரு புள்ளடியை மட்டுமே இடவேண்டுமென்றும் இல்லையேல் அந்த வாக்குச்சீட்டு நிராகரிக்கப்படுமென்றும் தேர்தல் திணைக்களம் அறிவித்தள்ளது.

அத்துடன் வாக்களித்தவுடன் வாக்கெடுப்பு நிலையத்திலிருந்து சுமார் 400 மீற்றர் தூரத்துக்குள் கூட்டமாக கூடி நிற்காமல் அனைவரும் தத்தமது வீடுகளுக்கு உடன் திரும்ப வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன் முதலாவது உள்ளூராட்சி சபைக்கான பெறுபேறு இன்று இரவு 10 மணிக்கு ஊடகங்கள் மூலம் வெளியிடப்படும் என்றும் மேலதிக தேர்தல் ஆணையாளர் எம்.மொஹமட் கூறினார்.

இதேவேளை இன்று நடைபெறும் தேர்தலை நீதியானதும் சுதந்திரமானதுமான முறையில் நடத்துவதற்காக 4 ஆயிரம் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட 65 ஆயிரம் பொலிஸார் நாடு முழுவதும் சேவையிலீடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையக பேச்சாளர் பொலிஸ்அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

அத்துடன் வாக்கெடுப்பு நிலையங்கள் மற்றும் வாக்கு எண்ணும் நிலையங்களின் அமைதியை குலைக்கும் வகையில் எவரேனும் குழப்பம் விளைவித்தால் அவர்களுக்கு எதிராக ஆகக்கூடிய அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு பொலிஸாருக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

Related posts:

பாலூட்டும் தாய்மார்கள் தடுப்பூசியை பெற்றுக்கொள்வதில் ஆபத்து கிடையாது - உலக சுகாதார ஸ்தாபன நிபுணர் தெ...
கடல் கொந்தளிப்பு! பலத்த மழைக்கு வாய்ப்பு - பொது மக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
22 இலங்கை மாணவர்கள், இந்தியாவில் இந்தி படிப்பதற்காக இந்திய அரசாங்கத்தால் புலமைப்பரிசில் வாய்ப்பு!