நிதி முறைகேடு தொடர்பில் விசாரணை – ஆளுநர் றெஜினோல்ட் குரே!
Friday, November 30th, 2018
வடமாகாண மகளிர்விவகார அமைச்சினால் முறைகேடாக செலவழிக்கப்பட்டதாக கூறப்படும் ரூபா 320 இலட்சம் பணம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இதற்காக மூவர் அடங்கிய விசாரணைக்குழுவினை வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே அமைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாண அவைத்தலைவர் சிவிகே.சிவஞானம் ஆளுநரிடம் விடுத்த எழுத்துமூலமான குற்றசாட்டின் அடிப்படையில் இந்த விசாரணை இடம்பெறவுள்ளது.
இந்தக் குழுவில் வடக்கு சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன், வடமாகாண கணக்காய்வுத் திணைக்களப் பணிப்பாளர் எஸ்.சுரேந்தினி, மாகாண சுகாதார திணைக்கள கணக்காளர் கஜேந்திரன் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் இரு வாரங்களுக்குள் விசாரணைகளின் அறிக்கையினை சமர்பிக்குமாறு ஆளுநர் றெஜினோல்ட் குரே விசாரணை அதிகாரிகளை பணித்துள்ளார்.
Related posts:
வெசாக் பூரணைத்தின அலங்கார காட்சிகள் ஊடகங்கள் வாயிலாக காட்சிப்படுத்தப்படும் - இராஜாங்க அமைச்சர் தயாசி...
நிறைவுக்கு வந்தது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்களின் பெயர்களை உள்ளிடுவதற்கான கால அவகாச...
இணையத்தளத்தின் ஊடாக இரண்டு நாள் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுடனான சந்திப்பு – பொது நிர்வாக அமைச்...
|
|
|


