நாட்டில் மூன்று வெளிநாட்டுப் பிரஜைகள் உயிரிழப்பு!
Sunday, April 30th, 2017
சவுதிய அரேபியாவில் இருந்து இந்தோனேஷியா நோக்கி பயணித்த விமானத்தில் இருந்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாக விமானத்தை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கி நோயாளி நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கும்போது உயிரிழந்துள்ளார்.
75 வயதுடைய இந்தோனேஷிய பிரஜை ஒருவரே உயிரிழந்துள்ளார். இதேவேளை ஹிக்கடுவை, நாலாகஸ்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த வௌிநாட்டு பிரஜை ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
73 வயதுடைய பிரித்தானிய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தெமட்டகொடை, மஹவல ஒழுங்கை பிரதேசத்தில் வீதியில் விழுந்திருந்த 40 வயதுடைய சீனப் பிரஜை ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார்.
Related posts:
பேரீச்சம்பழத்திற்கான வரியை அதிகரித்த அரசாங்கம்!
மேலும் 3 நிறுவனங்கள் அமைச்சர் தம்மிக பெரேராவின் கீழ் - ஜனாதிபதியினால் அதி விசேட வர்த்தமானியும் வெளிய...
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை - 55 ஆயிரத்து 780 பேர் பாதிப்ப என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவி...
|
|
|


