பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­த அரசாங்கம்!

Friday, May 5th, 2017

நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதிகரித்துள்ளது. இதன்­மூலம் நோன்பு நோற்கும் மக்­களின் ஊடாக வரு­மா­னத்தை ஈட்­டவே அர­சாங்கம் முயற்­சிக்­கி­றது. என மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹந்­துன்­நெத்தி கேள்வி எழுப்­பியுள்ளார்.

பாரா­ளு­மன்­றத்தில் விசேட வியா­பார பண்ட அற­வீட்டு சட்­டத்தின் மீதான விவா­தத்தில் கலந்துகொண்டு உரை­யாற்றும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்துள்ளார்

முஸ்­லிம்­களின் நோன்பு மாதம் வரு­வ­தனை அறிந்து அர­சாங்கம் பேரீச்சம்பழத்­திற்­கான வரியை அதி­க­ரித்­துள்­ளது. விசேட வியா­பார பண்ட அற­வீடு மூலம் பேரீச்­ச­ம்ப­ழத்­திற்­கான வரி அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. வெங்­காயம், உருளைக் கிழங்கு இறக்­கு­மதி உணவு வகையில் அதிகரிப்­பதன் ஊடாக பயிர்­செய்­கை­யா­ளர்கள் இலாபம் பெறு­வார்கள் என
கூற­மு­டியும். எனினும் பேரீச்­ச­ம்பழ வரி அதி­க­ரிக்­கப்­ப­டு­கின்­றது என்றால் இங்கே பேரீச்சம்பழம் பயி­ரி­டப்­ப­டு­கின்­றதா? பேரீச்­ச­ம்பழ பயிர்­செய்­கை­யா­ளர்கள் இலங்­கையில் உள்ளனரா? நோன்­பா­ளிகளை வைத்து அர­சாங்கம் தனக்கு இலாபம் ஈட்­டவே முயற்சிக்­கி­றது. இது பெரும் அநி­யா­ய­மாகும். எனவே இது தொடர்­பாக அர­சாங்­கத்தில் உள்ள முஸ்லிம் அமைச்­சர்கள் என்ன செய்யப்போகின்­றனர்? பெரி­தாக தம்மை முஸ்லிம் தலைவர்கள் என அறி­மு­கப்­ப­டுத்­து­ப­வர்கள் என்ன பதில் வழங்க போகின்­றனர் என கேள்வி எழுப்பியுள்ளார்

Related posts: