நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை – எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை!
Saturday, August 26th, 2023
தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
மிகக் குறைந்த நீர் உள்ள இடங்களில் குளிப்பதும், மீன்பிடிப்பதும் இந்த நோய்களுக்கு வழிவகுக்கும் என அதன் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிடுகின்றார்.
குறைந்தளவு நீர் உள்ள இடங்களில் குளிப்பதன் மூலம் தோல் நோய்கள் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக உபுல் ரோஹன வலியுறுத்தியுள்ளார்.
குடிநீர் விற்பனை செய்யும் இடங்களை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் குறிப்பிடுகிறது.
ஏனைய முறைகளில் கிடைக்கும் தண்ணீரை குடித்தால், காய்ச்சிய தண்ணீரையே பயன்படுத்த வேண்டும் என்றும் சங்கம் பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
கலைஞர்களுக்கும் வரிச் சலுகை!
இன்று முதல் தேசிய விபத்து தடுப்பு வாரம் ஆரம்பம்!
இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டம் விரைவில் மக்கள் பாவனைக்கு !
|
|
|


