A/L பரீட்சைகளுக்கு ஆணையாளர் விடுக்கும் கோரிக்கை!

Friday, July 8th, 2016

கல்வி பொதுதர உயர்தர பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களில் காணப்படும் பிரச்சினைகள் அல்லது திருத்தங்கள் தொடர்பில் இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு பரீட்சை விண்ணப்பதாரர்களிடம் பரீட்சைகள் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.

குறித்த பரீட்சையானது ஆகஸ்ட் மாதம் 2 ஆம் திகதியிலிருந்து 27 ஆம் திகதி வரை நடைப்பெறவுள்ளது.

பரீட்சைக்கு விண்ணப்பித்த  பாடசாலையை சேர்ந்த விண்ணப்பதாரர்களின் அனுமதிப்பத்திரமானது பாடசாலை அதிபர்களுக்கும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்களின் அனுமதிப்பத்திரமானது அவர்களின் தனிப்பட்ட விலாசங்களுக்கும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்தார்.

குறித்த பத்திரத்தில் காணப்படும் பாட திருத்தங்கள், மொழி ஊடக திருத்தங்கள் அல்லது பிற திருத்தங்களுக்கு பாடசாலையைச் சேர்ந்த  விண்ணப்பதாரர்கள் பாடசாலை அதிபர்களின் மூலமும் தனிப்பட்ட விண்ணப்பதாரர்கள் தமது திருத்தங்களை பரீட்சைத் திணைக்களத்தின் பாடசாலை பரீட்சைப்பிரிவில் அறிவிக்க வேண்டுமென தெரிவித்தார்.

இதேவேளை, குறிப்பிட்ட திகதிக்காக அனுமதிப் பத்திரங்கள் இதுவரை கிடைக்கப்பெறாத விண்ணப்பதாரர்கள் அவர்களின் விண்ணப்பப்பத்திரத்தின் பிரதி, பரீட்சைக் கட்டணம் செலுத்தப்பட்ட விலைப்பட்டியலின் பிரதி மற்றும் விண்ணப்பப் பத்திரத்தின் பதிவு தபாலின் பற்றுச்சீட்டு என்பவற்றை சமர்ப்பிப்பதன் மூலம் அனுமதிப்பத்திரத்தினை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவித்தார்.

குறித்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை 1911, 0112 784 208, 0112 784 537, 0113 140 314 என்னும் தொலைபேசி எண்களுக்கு அழைப்பதன் மூலம் அல்லது 0112 784 422 என்னும் மின்னஞ்சல் எண்ணிற்கு மின்னஞ்சலொன்றை அனுப்புவதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

ஜப்பான் கடல் சார்ந்த பாதுகாப்பு படையின் சிரேஷ்ட அதிகாரிகள் - கடற்படை தலைமை அதிகாரி சந்திப்பு!
பெப்ரவரி மாதத்தின் முதல் 10 நாட்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை...
சர்வதேச நாணய நிதிய ஊழியர்களுடனான ஒப்பந்தத்தை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க முடியாது: சபாநாயகர் அறிவிப்பு...