நாட்டிலுள்ள அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் – பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவிப்பு!

Tuesday, March 26th, 2024

எதிர்வரும் பெரிய வெள்ளி மற்றும் உயிர்த்த ஞாயிறு தினங்களில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த தினங்களில் தேவாலயத்துக்கு வரும் பக்தர்கள் மற்றும் அவர்களது பொதிகளை சோதனை செய்வதற்கு விசேட வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இது தொடர்பில் தேவாலயங்களுக்கு பொறுப்பான அருட்தந்தைகளுடன் கலந்துரையாடி இதனை நடைமுறைப்படுத்துமாறு சகல பிரிவுகளுக்கும் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இதன்படி, சமுதாய பொலிஸ் குழுக்கள் மற்றும் அந்தந்த தேவாலயங்களுக்கு பொறுப்பானவர்களுடன் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், நாளை மற்றும் நாளைமறுதினம் நாட்டில் உள்ள அனைத்து தலைமையக பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் தமது எல்லைக்குட்பட்ட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் நேரில் சென்று அங்குள்ள அருட்தந்தைகளையும் நிர்வாக அதிகாரிகளையும் சந்திக்குமாறு பொலிஸ்மா அதிபர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: