நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் தமிழகம் வருகை !
Tuesday, April 9th, 2024நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரதமர் மோடி, 7ஆவது முறையாக இன்று தமிழகத்திற்கு வருகை தந்துள்ளார்.
இதற்காக மராட்டிய மாநிலத்தில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி, இன்று மாலை 6 மணிக்கு சென்னை வருகை தரவுள்ளார் எனவும், அதன்பின்னர் நடைபெறவுள்ள பிரம்மாண்ட பேரணியில் கலந்துகொள்ளவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாகன பேரணியை முன்னிட்டு சென்னையில் டிரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, வாகன பேரணி நடைபெறவுள்ள இடங்களில் 5 அடுக்கு பாதுகாப்பும் போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த பகுதிகளில் 3 ,500 க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000
Related posts:
மாணவர்களுக்கு ஆட்பதிவு திணைக்களம் விடுத்துள்ள கோரிக்கை!
இலங்கை வளிமண்டலத்தில் மாசுத்தன்மை அதிகரிப்பு - காற்று தர பிரிவு எச்சரிக்கை!
உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - பரீட்சைகள் ஆணையாளர் அமித் ஜயசுந்தர...
|
|
|


