நாடளாவிய ரீதியில் நீர்வழங்கள் வடிகாலமைப்பு வேலை நிறுத்தத்திற்கு தயார்!

Sunday, January 28th, 2018

நாடளாவிய ரீதியில் பெப்ரவரி முதல் வாரத்திலிருந்து வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க உள்ளதாக நீர்வழங்கள் வடிகாலமைப்பு தொழிற்சங்கங்களின்ஒன்றிணைந்த கூட்டமைப்பானது அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

2018ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டிய சம்பள முறை இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என குறித்தகூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் உபாலி ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த சம்பள நடைமுறையை நடைமுறைப்படுத்த மேலும் தாமதம் ஏற்படுத்தினால் பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் வேலைநிறுத்தத்தினைமுன்னெடுக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் மேல் மாகாணத்தில் எதிர்வரும் 30ம் திகதி நான்கு மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தை முன்னெடுக்க உள்ளதாக உபாலி ரத்நாயக்கதெரிவித்துள்ளார்.

Related posts:

மரண விசாரணைக்கு இலஞ்சம் வாங்கினரா வட்டுக்கோட்டை பொலிஸார் - ஜனாதிபதி செயலகத்துக்கு பாதிக்கப்பட்டவர் க...
சிறுவர்களின் பாதுகாப்ப உறுதிசெய்யும் வகையில் சமூகப் புலனாய்வுப் பிரிவொன்று ஸ்தாபிக்கப்படும் - பாதுகா...
பால் உற்பத்தியை உள்நாட்டிலேயே செய்ய நடவடிக்கை - யாழ்ப்பாணம், கிளிநொச்சி பகுதிகளில் தொழிற்சாலைகளை அமை...

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இன்னும் 278 மெற்றிக் டன் எரிபொருள் இருக்க வாய்ப்பு - கடல்சார் சூழல் பாது...
அறநெறி கல்வியை கட்டாயமாக்க திட்டம் - அமைச்சரவை பத்திரமும் சமர்ப்பிப்பிக்க நடவடிக்கை - அமைச்சர் விதுர...
நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு - இறக்குமதி செய்யப்படும் சிமெந்துக்கு விதிக்கப்படும...