நள்ளிரவு முதல் பேக்கரி பொருட்களின் விலை குறைப்பு – இறக்குமதி செய்யப்படும் சிமெந்துக்கு விதிக்கப்படும் செஸ் வரி அதிகரிப்பு!

Tuesday, June 20th, 2023

இன்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவுமுதல் பேக்கரி பொருட்களின் விலை குறைக்கப்படும் என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நள்ளிரவு முதல் 450 கிராம் எடைகொண்ட ஒருஇராத்தல் பாண் மற்றும் ஏனைய பேக்கரி பொருட்களின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது

இதேநேரம் இறக்குமதி செய்யப்படும் சிமெந்துக்கு விதிக்கப்படும் செஸ் வரியை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த 17ஆம் திகதிமுதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த வரிகள் திருத்தப்பட்டுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, ஒரு கிலோ செயற்கை நிற அல்லது நிறமற்ற வெள்ளை சிமெந்துக்கு விதிக்கப்பட்ட 3 ரூபாய் என்ற செஸ் வரி 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

50 கிலோ மற்றும் அதற்கும் குறைவாக இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ சிமெந்துக்கு 5 ரூபாயாக இருந்த செஸ் வரி 8 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

50 கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட பொதிகளை மொத்தமாக இறக்குமதி செய்யும் சிமெந்துக்கான வரி 3 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts: