நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்ம்!
Friday, October 20th, 2017
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று(20) நள்ளிரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளதாக, ரயில்வே சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பணிக்கு இணைத்தல், சம்பளம் கொடுப்பனவு மற்றும் பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு பெற்றுக் கொடுக்கவில்லை எனவும் புதிய பயிலுனர் சாரதிகளை சேவையில் உள்ளீர்த்துக் கொண்ட செயற்பாட்டில் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதாகக் கூறி குறித்த இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி, நாளை நள்ளிரவு முதல் ரயில்வே சாரதிகள், பாதுகாவலர்கள், நிலையப் பொறுப்பதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.
Related posts:
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய சட்டம் !
கொரோனாவின் தாண்டவம் – உயிர்ப்பலி 11 ஆயிரத்தை தாண்டியது!
பிரித்தானியாவில் முகக்கவசம் அணிவதற்கான கட்டுப்பாடு நீக்கம்! - பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!
|
|
|


