தொடரும் மர்மம் : ஒரே குடும்பத்தில் மூன்று பிள்ளைகள் சாவு – வவுனியாவில் சோகம்!

Tuesday, June 19th, 2018

வவுனியா – கரப்பன்காடு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகள் இருதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தமை வட மாகாணத்தையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கரப்பன்காட்டை சேர்ந்த ரியோன் தம்பதியினருக்கு மகன் ஒருவரும் இரு பெண் குழந்தைகளுமாக ஓர் அழகிய குடும்பம்.

கடந்த 2004 ஆம் ஆண்டு குறைவான இருதய செயற்பாட்டின் தாக்கத்தினால் ரியோன் தம்பதியினரின் மூத்த புதல்வன் தனது 7 வயதில் இறைவனடி சேர்ந்தார்.

மூத்த மகனின் இழப்பை தாங்க முடியாத துயரத்தில் ஆழ்திருந்த பெற்றோருக்கு 14 வருடங்கள் கடந்த நிலையில் மற்றுமொரு தாங்க முடியாத சோகமாக கடந்த மே மாதம் முதற்பகுதியில் இரண்டாவது குழந்தையான 8 வயதுடைய தன்சிகா என்ற சிறுமி இருதய குறைபாட்டு நோயினால் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி மே மாதம் 22 ஆம் திகதி இந்த உலகை விட்டு பிரிந்தாள்.

இந்நிலையில் ரியோன் தம்பதியினரின் மூன்றாவது மகளான 7 வயதுடைய சரணிகா மாத்திரமே குடும்பத்திற்கும் பெற்றோருக்கும் ஆதரவாய் இருந்த நிலையில் அவளும் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதித்த போதே அந்த சிறுமியும் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை அறிய கிடைத்துள்ளது.

உடனடியாக இருதய மாற்று சிகிச்சைகளை மேற்கொள்ள அநுராதபுரம் போதனா வைத்தியாலையில் இருந்து நாட்டின் அனைத்து வைத்தியசாலைகளுக்கும் இருதய தேவைக்கான தகவல்கள் அனுப்பப்பட்டன.

தகவல் பரிமாற்றப்பட்டுக்கொண்டிருந்த வேளையில் பெற்றோரிடமிருந்தும் இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்றாள் சரணிக்கா.

இவர்கள் மூவரின் பிரிவு வவுனியா மாவட்டம் மாத்திரமின்றி வட மாகாணத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

35461938_2177106058973403_6996368989219717120_n 35828997_2177106298973379_6232886647675944960_n

Related posts: