அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் கல்வி கற்ற மாணவர்களுக்கு தாதியர் தொழிலை வழங்க உத்தேசம் – அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிப்பு!

Wednesday, August 2nd, 2023

தேசிய மருந்து ஒழுங்குபடுத்தல் அதிகார சபைச் சட்டம் மற்றும் இலங்கை மருத்துவ சபைச் சட்டம் என்பன முற்றாக நீக்கப்படுமென சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

சுகாதார துறையில், மிகவும் திறந்த மற்றும் நியாயமான சந்தையினை அனுமதிக்கும் வகையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் விஞ்ஞானப் பாடம் மாத்திரமன்றி அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் கல்வி கற்ற மாணவர்களுக்கு தாதியர் தொழிலை வழங்க உத்தேசித்துள்ளதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் Benchmark 4 எனும் சர்வதேச அங்கீகாரம் பெற்ற நவீன ஆய்வுகூட வசதிகளை மருந்துப் பரிசோதனைக்காக இலங்கையில் ஸ்தாபிக்க எதிர்பார்ப்பதாகவும் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: