திறந்த வாகனத்தில் கொண்டு செல்லப்படும் கழிவுகளால் மக்கள் பெரும் அசௌகரியம்!

Tuesday, June 26th, 2018

யாழ் மாநகர சபை கழிவகற்றும் திறந்த வாகனத்தில் குப்பைகளை எடுத்து செல்வதால் அவை வீதிகளில் கொட்டப்படுவதோடு அவற்றை பறவைகள் இழுத்துச்சென்று ஆங்காங்கு போட்டுவிட்டும் செல்கின்றன.

குறிப்பாக சந்தைகளில் இருந்து அகற்றப்படும் மீன் மற்றும் இறைச்சி கழிவுகள் தினமும் உழவு இயந்திர வாகனம் மூலம் பாதுகாப்பான முறையில் கல்லுண்டாய் வெளிக்கு யாழ் நகர் வீதி ஊடாக கொண்டு செல்லப்படுகின்றது. அக் கழிவுகள் கொண்டு செல்லப்படும்போது வீதியால் பயணிக்க முடியாதளவுக்கு துர்நாற்றம் வீசுகின்றது.

இதனால் மூக்கைப்பொத்தயவாறே பயணிக்க வேண்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை முற்றவெளி வீதியூடாக உழவு இயந்திர வாகனத்தில் இக் கழிவுகள் யாவும் பாதுகாப்பு வலையால் மூடப்படாது கொண்டுசெல்லப்பட்டதால் பறவைகள் வாகனத்தை சூழ்ந்து இக் கழிவுகளை கொட்டி வீதிகளில் சிந்தியதாக காணமுடிந்ததாக குறித்த பகுதி வியாபாரிகள் சுட்டிக்காட்டினர். இவ்வாறு திறந்த வாகனத்தில் சந்தைக் கழிவுகள் கொண்டு செல்வதை தவிர்க்க வேண்டும்.

முனித சுவாசத்திற்கும் சுகாதாரத்திற்கும் பங்கம் விளைவிக்கும் இக் கழிவுகளை மூடிய வாகனத்தில் எடுத்துச் செல்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாநகரசபை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related posts: