திங்கட்கிழமை மாறுகின்றதாம் அமைச்சரவை மாற்றப்படுகிரர்கள்  முக்கிய அமைச்சர்கள்

Sunday, May 21st, 2017

பலத்த இழுபறிகளின் மத்தியில் நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கிய பங்காளிக் கட்சியான  ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சரவையை மாற்றியமைக்க உடன்பட்டுள்ளது எனவும் வரும் திங்களன்று அமைச்சரவை மாற்றியமைகப்ப்டும் எனவும் அறிய முடிகிறது.

ஆரம்பத்தில், ஐ.தே,க, அதன் நாடளமன்ற உறுப்பினர்கள் வகிக்கும் அமைச்சுப பொறுப்புகளில்  எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தக் கூடாது எனக் கூறி வந்தது.  எனினும் ஜனாதிபதித் மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐ.தே,க, முகியஸ்தர்கள் சிலருக்கும் இடையில் நேற்று இடம்பெற்ற  சந்திப்பொன்றின்  பின்னர் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படுவதற்கு கட்சித் தலைமையை பச்சைக்கொடி வழங்கியுள்ளதாக தேரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க வெளியுறவு அமைச்சராகவும் வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீர நிதி மற்றும் ஊடக அமைச்சராகவும்  நியமிக்கப்படவுள்ளதாக அரச வட்டாரங்கள் தேர்விதுள்ளன. ஊடகத் துறை அமைச்சர் கயந்த கருணாதிலக பொது நிர்வாக அலுவல்கள் அமைச்சராகவும் அமைச்சர் ரஞ்சித் மடும பண்டார காணி அமைச்சராகவும்  நியமிக்கப்படுவார்கல் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி தலைமையில் உள்ள  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள அமைச்சுப் பொறுப்புகளிலும்  மாற்றங்கள் செய்யப்படலாம்  எனவும்  அறிய முடிகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, அவர்களும் அமைச்சரவை மாற்றதை வலியுறுத்தி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Related posts: