தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை – அமைச்சர் ராஜித!
Thursday, July 20th, 2017
தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் விடயம் தொடர்பில் இன்னும் தீர்வு காணப்படவில்லை. அரசியல் கைதிகளின் பிரச்சினைக்ளுக்கு தீர்வு காணப்படவில்லை.தமிழ் மக்களின் காணிகளின் உரிமை தொடர்பில் முடிவு காணப்படவில்லை. இவ்வாறான அடிப்படை விடயங்கள் தொடர்பான முடிவுகள் இல்லாத நிலையில் அனைத்தும் வெற்றியளித்து விட்டதாக எம்மால் கூற முடியாது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Related posts:
கொரோனா தொற்று: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்துக்கும் அதிகம்!
நாடு முன்னேறுவதை சில தரப்பினர் விரும்பவில்லை - நீதி அமைச்சர் அலி சப்ரி குற்றச்சாட்டு!
கடினமான சந்தர்ப்பங்களில் ஒன்றாக இருந்த, ஒரு நோக்கத்திற்காக போராடிய எவரையும் கைவிட முடியாது - பிரதம...
|
|
|


