தனியார் வகுப்புக்களை நடத்துவதில் புதிய நடைமுறை!

Thursday, March 29th, 2018

பௌர்ணமி தினத்தில் தனியார் வகுப்புக்களை நடத்துவது தொடர்பில் புதிய நடைமுறையொன்றை செயற்படுத்த எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

மே 07ஆம் திகதி அரச விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. குறித்த தினத்தில் சர்வதேச தொழிலாளர் தின நிகழ்வுகளை மேற்கொள்ள முடியும்.

அத்துடன், பௌர்ணமி தினத்தில் தனியார் வகுப்புக்களை நடத்துதல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு புதிய நடைமுறை ஒன்றை செயற்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இது தொடர்பில் தனியார் வகுப்புக்களை நடத்தும் நிறுவனங்களிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைக்கவுள்ளாதாகவும், பொருத்தமான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts:

எமது வெற்றிக்கு பசில் ராஜபக்சவே காரணம் - ராஜபக்ச சகோதாரர்கள் மத்தியில் மோதல்களை ஏற்படுத்த நினைப்போர்...
“வரி செலுத்தாதவர்கள் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் - அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நி...
வெசாக் வாரம் ஆரம்பம் - எரிபொருள் விற்பனை வரலாறு காணாத வகையில் அதிகரிப்பு என விநியோகஸ்தர்கள் தெரிவிப்...