ஜனாதிபதி ஆணைக்குழுவில் பரபரப்பான ஆவணம்

Wednesday, May 17th, 2017

மத்திய வங்கி பிணைமுறை விவகாரம் தொடர்பில் விசாரித்துவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் பரபரப்பான ஆவணம் கையளிக்கபடவிருந்ததைத் தொடர்ந்து அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களும் வெளியாட்களும் அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறீசேனா உயர்நீதிமன்ற நீதிபதிகளான கன்கனிதான்திரி. சித்ரசிறி, பிரசன்னா சுஜீவ ஜெயவர்தன மற்றும் முன்னாள் பிரதி கணக்காய்வாளர் நாயகம் கந்தசாமி வேலுப்பிள்ளை ஆகியோர் கொண்ட குழுவை திறை சேரி பிணைமுறி  விவாகரம் தொடர்பில் விசாரிப்பதற்காக  கடந்த ஜனவரி மாதம் 27ஆம் திகதி அன்று நியமித்தார்.

தொடர்ச்சியாக  இடம் பெற்றுவரும் இந்தா ஆணைக் குழுவின் விசாரணையில் கடந்த பல நாட்களாக மத்திய வங்கியின் துணை ஆணையாளர் சாட்சியமழித்து வருகிறார்.

இதன் நேற்றைய விசாரணையின் போது முக்கிய ஆவணம் ஒன்று துணை ஆணையாளரினால் ஆணைகுழுவினரிடம் சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது. இதனை அடுத்து பல  ஊடக வியலாளர்கள் அங்கே கூடத் தொடங்கினர். இதனை அவதானித்த  ஆணைக் குழுவின் தலைவர் அங்கிருந்த அனைத்து ஊடக வியலாளர் களையும் அங்கே பார்வையாளர்களாக இருந்த சில பொது மக்களையும் அங்கிருந்து வெளியேற்றிவிட்டு விசாரணைகள தொடர்ந்தார்.
நேற்றைய தினம் முக்கிய ஆவணம் எதாவது சமர்ப்பிக்கப்  பட்டதா, அப்படியாயின் அது என்ன ஆவணம் என்பது தொடர்பில் எதுவித தகவல்களும் இன்னமும் வெளியாகவில்லை.

Related posts:


சிவில் பாதுகாப்பு படை திணைக்களம் தனது முன்னைய பெருமையை மீண்டும் பெற்று வருகிறது - பாதுகாப்பு செயலாள...
கொரோனா தொற்றுக்கு மத்தியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பு - சுகாதார தரப்பினர் எச்சரிக...
மூன்று நிறுவனங்களில் 1500 க்கும் மேற்பட்ட வெற்றிடங்கள் - நிதி அமைச்சில் பணிபுரியும் பொருத்தமான பட்டத...