ஜனாதிபதியுடன் ஆளுநர் ரெஜினோல்ட் குரே திடீர் சந்திப்பு!
Monday, June 19th, 2017
தற்போது வடமாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை இன்று சந்தித்து பேசவுள்ளதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
இந்த வியடம் தொடர்பில் வடக்கில் பல்வேறு தரப்புகளுடனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள அவர், இன்றைய தினம் ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நேற்று முன் தினம் கொழும்புக்கு அவசர விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதிலும் ஜனாதிபதியை சந்திக்க முடியவில்லை. வடமாகாணத்தில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடி, அரசியல் அமைப்புக்கு அமைய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, வடமாகாணத்தில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து பல்வேறு தரப்புகளுடனும், பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில், குறித்த பிரச்சினை சுமூகமாக தீர்க்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|
|


