சைட்டம் விவகாரம்: தீர்வின்றேல் சாகும் வரை உணவு தவிர்ப்பு போராட்டம் தொடரும்!

Tuesday, November 7th, 2017

அரசாங்கத்தினால் சைட்டம் பிரச்சினை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்து ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர் உணவு தவிர்ப்பு போராட்டம் இன்றும் தொடரவுள்ளதாக மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் கூடாரம் அமைத்து நேற்று மாலை அவர்கள் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இந்த நிலையில் தமது கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால் சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அந்த சங்கத்தின் ஊடக பேச்சாளர் நிமல் கருணாசிறி எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார்.

Related posts: