சைட்டம் மாணவர்களுக்கு இலங்கை மருத்துவச் சபையின் அங்கீகார  பட்டம்!

Monday, December 11th, 2017

சைட்டம் நிறுவனத்தில் பட்டங்களை பெற்றுக்கொண்டவர்கள் மற்றும் தற்போது அங்கு மருத்துவம் கற்று வருவோரின் தகுதியை பரீட்சித்து இலங்கை மருத்துவச் சபையின் அங்கீகாரத்துடன் பட்டத்தை வழங்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகளின் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு மருத்துவப் பீடத்தின் மருத்துவப் பட்டத்தை அவர்களுக்கு வழங்கி பிரச்சினை முடிவுக்கு கொண்டு வருவது குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் எனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.தமது சங்கத்தின் மத்திய செயற்குழுவில் கூடி இது சம்பந்தமாக ஏகமனதான முடிவுகளுக்கு வந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts: