எதிர்வரும் மே மாதத்தில் கொரோனாவின் மூன்றாவது அலை இலங்கையைத் தாக்கும் – பொது சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் செயலாளர் எச்சரிக்கை!

Monday, April 12th, 2021

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப் பகுதியில் சுகாதார வழிகாட்டுதல்களை பொது மக்கள் புறக்கணித்து செயற்பட்டால் எதிர்வரும் மே மாதத்தில் கொரோனா தாக்கத்தின் மூன்றாவது அலை இலங்கையைத் பெரிதும் தாக்கும் அபாயம் உள்ளது என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.

முன்பதாக பொதுச் சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் இவ்விடயம் தொடர்பில் பல எச்சரிக்கைகளை விடுத்த போதிலும், மக்கள் கொரோனா வைரஸ் தொடர்பிலான சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை பொதுவில் கொண்டு செல்வதைக் காணமுடிகின்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் நாட்டில் சுற்றுச்சூழல் பிரச்சினை மற்றும் அசுத்தமான தேங்காய் எண்ணெய் பிரச்சினை போன்றவை கொரோனா வைரஸுடன் தொடர்புடைய மிகவும் தீவிரமான சிக்கலை மறைத்துவிட்டதாகவும் பொது சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் செயலாளர் மகேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இதன் விளைவாக வைரஸ் இயல்பு நிலைக்கு வந்துவிட்டன என்றும், கொரோனா வைரஸ் இயற்கையான மரணம் அடைவதாகவும் பொதுமக்கள் கருதுகின்றனர் என தெரிவித்துள்ள பொது சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் செயலாளர் “இந்த அச்சத்தை மீண்டும் ஒரு முறை பொதுமக்களிடையே ஏற்படுத்துவது கடினம்,” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. மூன்றாவது அலை நம்மைத் தாக்கும் போது மட்டுமே இது எவ்வளவு தீவிரமானது என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்றும் மக்களை எச்சரித்துள்ள பொது சுகாதார ஆய்வாளர் சங்கத்தின் செயலாளர் இது குறித்து நாங்கள் எச்சரிக்கை செய்து வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் பொதுமக்கள் தொடர்ந்தும் அசமந்தமாக செயற்பட்டால் கொரோனா வைரஸின் தாக்கம் மே மாதம்முதல்’ அதிகரித்து  புதிய கொத்துகள் தோன்றும் நிலை உருவாகும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் அதைச் சமாளிக்க அதிகாரிகள் மருத்துவமனைகள் மற்றும் பிற வசதிகளை தயார் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


ஒருசிலரது சுயநலன்களே மாநகரம் வெள்ளதத்தில் மூழ்க காரணம் – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றெமீடியஸ...
நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முயற்சியில் வெளிநாட்டு தூதுவர்களுடன் நிதி அமைச்சர் பசில் ராஜப...
மூடப்பட்டிருக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு தீர்மான...