சேதமடைந்த நாணயத்தாள் வைத்திருப்பவரே ஏற்படும் நட்டத்ததை பெறுப்பேற்க வேண்டும்!
Thursday, March 29th, 2018
சிதைக்கப்பட்ட அல்லது உரு மாற்றப்பட்ட நாணையத்தாள்கள் மார்ச் 31 ஆம் திகதியின் பின்னர் ஒருவரிடம் இருக்குமாயின் அதனால் ஏற்படக் கூடிய நட்டத்தை நாணையத்தாள் வைத்திருப்பவரே ஏற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் மத்திய வங்கியின் நாணையத்தாள் பிரிவைச் சேர்ந்த அதிகாரி தீபா செனவிரத்தின தெரிவித்தவை வருமாறு :- நாணையத்தாள்கள் வேண்டுமென்றே சிதைக்கப்பட்டு அல்லது உருமாற்றப்பட்டு இருக்கும் என்பதன் பொருள் நாணையத் தாள்களில் எழுத்து இலக்கக்கோடு இடுதல் ஆகியவற்றின் மூலம் நாணையத்தாள்களுக்கு வேண்டுமென்றே பாதிப்பை ஏற்படுத்தலாகும் .நாணையத் தாள்களின் தொடர் இலக்கக் கையெழுத்து வெளியிடப்பட்ட திகதி பாதுகாப்பு அடையாளம் (பாதுகாப்பு இலச்சினை ) ஆகிய நாணையத் தாள்களில் இருக்கக் கூடிய இலட்சணங்களாகும் வேண்டுமென்றே சிதைக்கப்பட்ட அல்லது உருமாற்றப்பட்ட நாணையத்தாள்கள் புழக்கத்திலிருந்து நீக்கப்படும் இருப்பினும் வெள்ளம் ,தீ போன்ற இயற்கை அனர்த்தங்களால் அல்லது நாளாந்த பாவனையின் போது பாதிப்புக்குள்ளாகும் நாணையத்தாள்களை மாற்றிக் கொள்வதற்கு நிர்ணய திகதி கிடையாது
இவ்வாறான நாணையத்தாள்களில் 75 சதவீதமான பாதிப்பு இருக்குமாயின் அவ்வாறான நாணையத்தாள்கள் வழங்கப்படும் 50 வீதமான பாதிப்பு இருக்குமாயின் குறிப்பிட்ட நாணையத் தாள்களுக்கு அரைவாசி பங்கு பெறுமதிக்கான நாணையத்தாள்கள் வழங்கப்படும் முழுமையான பாதிப்புக்குள்ளான நாணையத்தாள்கள் அதன் உரிமையாளருக்கு வழங்கப்படமாட்டாது என்றும் மத்திய வங்கியின் நாணையத்தாள் பரிவைச் சேர்ந்த அதிகாரி தீபா செனவிரத்தின மேலும் சுட்டிக்காட்டினார்
எதிர்வரும் 31 ஆம் திகதியின் பின்னர் வேண்டுமென்றே சிதைக்கப்பட்ட அல்லது உரு மாற்றப்பட்ட நாணையத்தாள்கள் ஒருவரிடம்; இருக்குமாயின் அதனால் ஏற்படக்கூடிய நட்டத்தை நாணையத்தாள் வைத்திருப்பவரே எற்றுக் கொள்ள வேண்டும்
ஏ.ரி.எம் இயந்திரத்தின் மூலம் பணம் பெற்றுக்கொள்ளும் போது அதன் பொறுப்பு வங்கிக்கே உரித்தாகும் அத்துடன் சி.டி.எம் இயந்திரத்தின் மூலம் பணத்தை வைப்புச் செய்பவருக்கே உரித்தாகும். பணத்தைப் பெற்றுக்கௌ;ளும் போது இவ்வாறான நாணையத்தாள்கள் கிடைக்கப்பெற்றால் அதாவது பாதிக்கப்பட்ட நாணையத்தாள்கள் ஏ.ரி.எம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி கமராவில் அதன் காட்சிகளை பதிவு செய்ய வேண்டும் அவ்வாறான நாணையத்தாள்களை சமர்ப்பித்து அதற்கான நாணையங்களை பெற்றுக் கொள்ள முடியும் .
அதன் காரணமாக இலங்கை மத்திய வங்கியின் வர்த்தக நிதித் திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக் கொள்வது என்னவென்றால் நாணையத்தாள்களில் எழுதுதல் சேதப்படுத்துதல் போன்ற பழக்க வழக்கங்களில் இருந்து தவிர்த்தக் கொள்ள வேண்டும்.
நாணையத்தாள்களை பயன்படுத்தும் போது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று பொது மக்களிடம் அத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது .
Related posts:
|
|
|


