சுவிஸிலிருந்து கொழும்பிற்கு விமான சேவை!
Tuesday, December 5th, 2017
சுவிட்சர்லாந்திலிருந்து கொழும்பிற்கு நேரடி விமான சேவையை ஆரம்பிக்க Edelweiss விமான சேவை நிறுவனம் முன்வந்துள்ளது.
ஆசிய எல்லைக்குள் தனது சேவையை மேலும் விஸ்தரிக்கும் நோக்கில் சுவிட்சர்லாந்தின் Edelweiss விமான சேவை, சூரிச்சிலிருந்து கொழும்பிற்கு நேரடி விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அடுத்த வருடம் நவம்பர் மாதம் 3ஆம் திகதியில் இருந்து அவர்கள் இந்த சேவையை ஆரம்பிக்கவுள்ளனர். அதற்காக Edelweiss எயார்பஸ் A340-300 விமானங்கள் வாரத்திற்கு இரண்டு முறை பயணிக்கவுள்ளது.இந்த விமான சேவை மூலம் சுவிட்சர்லாந்து மக்கள் மற்றும் வேறு ஐரோப்பிய நாட்டவர்கள் இலகுவாக இலங்கைக்கு வர முடியும் என குறிப்பிடப்படுகின்றது.
Related posts:
அதிகாரத்தை மீறிய செயற்பாடே மணல்காடுச் சம்பவம்ரு - வான் குணசேகர
லங்கா சோல்ட் நிறுவனத்துக்கு ஒருவருடம் காலக்கெடு விதித்துள்ள ஜனாதிபதி!
அரசின் அத்தியாவசியமற்ற 100 நிறுவனங்களுக்கு மூடுவிழா!
|
|
|


