சி. க. கூ. சங்கம் வலுவானது எனில் எப்போதும் உதவுவதற்குத் தயார் -யாழ். மாநகர ஆணையாளர் உறுதி!

Wednesday, March 21st, 2018

சிக்கனக் கடனுதவுக் கூட்டுறவுச் சங்கம் வலுவானதாகச் செயற்பட்டால் அந்தச் சங்கத்துக்கு எனது உதவி எப்போதும் இருக்கும் என்று யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் இ.த.ஜெயசீலன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாநகர சபை ஊழியர் சிக்கனக் கடனுதவு கூட்டுறவுச் சங்கத்தின் 40 ஆவது வருடாந்தப் பொதுக்கூட்டம் நாவலர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.இதில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாண மாநகர சபை ஊழியர் சிக்கனக் கடனுதவு கூட்டுறவுச்சங்கம் ஆனது மிக நீண்ட வரலாற்றைக் கொண்டது. 1946 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. ஆயிரத்து 200 பேர் மாநகர சபையில் வேலை செய்கிறார்கள். அவர்களை ஒரே தடவையில் பார்க்கும் அளவுக்கு இந்தச் சங்கம் செயற்பட வேண்டும். சங்கம் எப்பொழுதும் உடையாமலும் சங்கம் வலுவாகச் செயற்படுமானால் என்னுடைய உதவி எப்பொழுதும் சங்கத்துக்கு இருக்கும் என்றார்.

நிகழ்வுக்கு தலைமை வகித்த சிக்கனக் கடனுதவுக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் கோ.நாரேந்திரன் தனது தலைமையுரையில் தெரிவிக்கும் போது: ஆறு இலட்சம் ரூபா பணம் எங்களுடைய சங்கத்தில் வைப்பில் இருக்கிறது. தற்போது 24 அங்கத்தவர்கள் புதிதாக சங்கத்தில் இணைந்துள்ளனர். ஒரு வருடத்துக்கு இரண்டு இலட்சம் ரூபா வைப்பில் இட்டால் சங்கம் வளர்ச்சி அடையும் என்றார்.

நிகழ்வில் கலந்து கொண்ட செயலாளர் லீ.அனிடஸ் சென்ற பொதுக்கூட்ட அறிக்கையை சமர்ப்பித்தார். அதனைத் தொடர்ந்து பொருளாளர் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. புதிய அங்கத்துவம் பெற்றவர்களை அங்கிகரிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.

Related posts: