அழியும் அபாயத்தில் இருக்கும் யானைகளைப் பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் – சர்வதேச யானைகள் பாதுகாப்பு தினம் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Thursday, August 12th, 2021

உலகம் முழுவதும் உள்ள மக்கள் மற்றும் கலாசாரம் ஊடாக நேசிக்கப்படும் மற்றும் மதிக்கப்படும் விலங்காகக் காணப்படும் யானைகளின் பாதுகாப்பிற்காக ஒரு அரசாங்கமாக நாம் எப்போதும் முன்நின்றோம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவற்றின் பாதுகாப்பிற்காக பாரிய சேவையாற்றியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச யானைகள் பாதுகாப்பு தினம் தொடர்பில் பிரதமர் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்தாவது –

பழங்காலத்திலிருந்தே இலங்கை கலாசாரத்தை உலகுக்கு உணர்த்தும் கலாசார நிகழ்வான பெரஹர போன்ற நிகழ்வுகளின் மூலம் இந்த மரியாதைக்குரிய விலங்கு இலங்கை சுற்றுலாத்துறைக்கு அளித்த சேவை மகத்தானது.

வேட்டையாடுதல், வாழ்விட இழப்பு, மனித – யானை மோதல் போன்றன ஆபிரிக்க மற்றும் ஆசிய யானைகளுக்கு பல அச்சுறுத்தல்களாகும். காட்டு யானைகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குதல், சட்டவிரோத வேட்டை மற்றும் யானை தந்த வர்த்தகத்தை தடுக்க சட்ட அமுலாக்க கொள்கைகளை மேம்படுத்துதல், யானைகளின் வாழ்விடங்களை பாதுகாத்தல், பிடித்துக்கப்பட்ட யானைகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்குதல் மற்றும் பாதுகாக்கப்பட்ட சரணாலயங்களுக்கு திருப்பி அனுப்புதல் என்பன யானைகள் பாதுகாப்பின் நோக்கமாகும். உலகெங்கிலும் உள்ள யானைகள் பாதுகாப்பு அமைப்புகளும் இதில் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன.

இலங்கையில் அதிகளவில் பேசப்படும் மற்றும் மக்களை சிரமத்திற்கு உட்படுத்தும் யானை – மனித மோதலை தீர்ப்பதற்கு தற்போதைய அரசாங்கம் இதுவரை பல நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், யானைகள் அழியும் அபாயத்தில் இருக்கும் இந்நேரத்தில், யானைகளைப் பாதுகாப்பது ஒரு அரசாங்கமாக நம் அனைவரின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அதற்காக ஒரு தேசமாக அனைவரும் அணிதிரள வேண்டிய காலம் எழுந்துள்ளது என்பதை இன்றைய யானைகள் பாதுகாப்பு தினத்தில் நாம் அனைவரும் மனதில் கொண்டு செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: