சிறைச்சாலைக்குள் மோதல் – வெனிசுலாவில் 29 பேர் பலி!
Saturday, May 25th, 2019
வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த சிறைச்சாலையில் கைதிகளுக்குள் கலவரம் ஏற்பட்டுள்ளது. கைதிகள் ஒருவருக்கொருவர் கொடூரமாக தாக்கியுள்ளனர்.
இந்த கலவரத்தில் 29 கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், 19 காவலர்கள் காயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related posts:
போர்த்துகல் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவது சவாலானது!
இலங்கை வரலாற்றில் உருவாகிய அரசாங்கங்களில் இதுவே மிகவும் பலமான அரசாங்கம் – ஜனாதிபதி கோட்டாபயவுக்கு கல...
சீனாவின் ‘புதிய பட்டுப் பாதை திட்டம்’ குறித்து ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டு!
|
|
|


