சாவகச்சேரி வைத்தியசாலை மதிலை உயர்த்த வேண்டும்!

Wednesday, June 6th, 2018

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சுற்று மதிலை உயர்த்த வேண்டிய தேவை இருப்பதாக வைத்தியசாலையின் அத்தியட்சகர் பசுபதி அச்சுதன் தெரிவித்தார்.

அண்மையில் யாழில் இடம்பெற்ற திணைக்கள தலைவர்களுக்கிடையிலான கலந்துரையாடலின் போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் சுற்று மதிலின் உயரம் போதுமானதாக இல்லை. சுற்று மதிலை உயர்த்துவதன் மூலம் சில அசம்பாவிதங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க முடியும்.

அத்துடன் தற்போது வைத்தியசாலையில் குருந்தம் (மது வெறுப்பு சிகிச்சை நிலையத்தின்) கூரைப் பகுதி சேதமடைந்து காணப்படுகின்றன.

அதன் கூரை வேலைகளை புனரமைக்க வேண்டிய தேவை உள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் உள்ள மோட்டர் இயந்திரம் வலு, மின்சாரம் தடைப்படும் நேரத்தில் போதுமானதாக இல்லை.

இதனால் மின்சாரம் தடைப்படும் நேரங்களில் எக்ஸ்ரே எடுத்தல் போன்ற சில நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது.

இந்த குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு வைத்திய அத்தியட்சகர் அச்சுதன் அதிக வலுவுடன் கூடிய மோட்டர் இயந்திரம் ஒன்றை வைத்தியசாலைக்கு பெற்றுக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts:

மே மாதத்திற்குப் பிறகு அரை சொகுசு பயணிகள் பேருந்து சேவை நிறுத்தம் - தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெர...
வனவள மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் சுவீகரிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்களின் காணிகளை மீள வழங்...
அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் கடுமையான கட்டுப்பாடு - யாழ் மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ...