சலுகை அடிப்படையில்  சூரிய சக்தி மின் உற்பத்தி   கடன்!

Wednesday, November 29th, 2017

2018 வரவு செலவுத்திட்டத்தின் சாகச முயற்சி செயற்றிட்டத்தின் கீழ் சூரிய சக்தியை உற்பத்தி செய்வதற்காக சலுகை அடிப்படையில் விசேட கடன் திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க கட்டடங்களில் பொருத்தப்படும் சூரியசக்தி உற்பத்தி கருவிகளுக்காக தனியார் வீட்டு உரிமையாளருக்கு 75 இலட்சம் ரூபாய் ஆகக்கூடிய கடனாக வழங்கப்படுவதுடன் எட்டு சதவீதம் வட்டி அறிவிடப்படும். இதற்காக தொழில் முயற்சியாளர்களுக்கு குறைந்த கடனாக 75 இலட்சம் ரூபாய் பெற்றுக்கொள்ள முடியும்.

தனியார் வீடுகளுக்கு மூன்று இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படும். இதற்கென ஆறு சதவீத வட்டி அறிவிடப்படும். இதற்கான 50 சதவீத வட்டிச் சலுகையை அரசாங்கம் வழங்கும் என்து குறிப்பிடத்தக்கது.

Related posts:

கொரோனா தொற்று : இலங்கையில் 98 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - தேசிய உளவுத்...
எக்காரணங்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நிர்மாண பணிகள் இடை நிறுத்தப்படமாட்டாது - நெடுஞ...
நெருக்கடி நிலை காரணமாக சுற்றுலா பயணிகளின் வருகை 60 வீதம் வீழ்ச்சி - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை ...