எக்காரணங்களுக்காகவும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி நிர்மாண பணிகள் இடை நிறுத்தப்படமாட்டாது – நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் உறுதி!

Monday, May 10th, 2021

பல சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல அபிவிருத்திகளும் நிர்மாண பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இத்தகைய பல சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களை எக்காரணங்களுக்காகவும் இடை நிறுத்தப்போவதில்லை என நெடுஞ்சாலை அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

பூகோள ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொவிட் வைரஸ் தாக்கத்தினால் தேசிய பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள சவால்களை வெற்றிக் கொள்ள அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு அரசாங்கம் பல தீர்மானங்களை நெருக்கடியான சூழ்நிலையில் முன்னெடுத்துள்ளது. நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் கோருகின்றனர்.

நாட்டை நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் எதிர்தரப்பினர் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கிறார்கள். நாட்டை முழுமையாக முடக்கினால் மக்கள் பொருளாதார மட்டத்தில் மேலும் பாதிக்கப்படுவார்கள். நாட்டை முழுமையாக முடக்கும் நோக்கம் கிடையாது என அரசாங்கம் தெளிவாக அறிவித்துள்ளது.

மக்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் அரசியல் நோக்கங்களுக்காக இடைநிறுத்தப்பட்ட அபிவிருத்தி நிர்மாண பணிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் சவால்களுக்கு மத்தியில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களை எக்காரணங்களுக்காகவும் இடை நிறுத்தப்போவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: