சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுறுத்தல்!
Sunday, January 14th, 2018
அரசாங்கம் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) வலியுறுத்தியுள்ளது.
இந்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் சாதாரண நிலைக்கு திரும்புகிறது. ஆனால் 4.6 சதவீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகின்ற போதும் மத்திய வங்கியால்எதிர்வு கூறப்பட்ட 5 ௲ 5.5 சதவீத வளர்ச்சியிலும் அது குறைவானதாகும்.
தற்போது காலநிலை சீரடைவினால் விவசாய நடவடிக்கைகள் சீரடைந்துள்ள போதும் கட்டுமான மற்றும் சேவைத்துறை மீட்சிபெறும் நிலையிலேயே இருக்கின்றது.
இதனடிப்படையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை அரசாங்கம் ஏற்படுத்த மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
சிறுவர்களைத் தாக்கும் மர்ம வைரஸ்: அச்சத்தில் தென்னிலங்கை!
இலங்கையில் அலுமினியம் இறக்குமதிக்கு வருகிறது தடை - அமைச்சர் மஹிந்த அமரவீர!
ஒப்பந்ததாரர்களுக்கு அரசு வழங்க வேண்டிய 122 பில்லியன் ரூபாவை செலுத்த நடவடிக்கை - அமைச்சர் பிரசன்ன ரணத...
|
|
|


