சர்வதேச சூரியசக்தி பு மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி இந்தியா விஜயம்!
Saturday, March 10th, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்றையதினம் இந்தியாவுக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்
பிரான்ஸ் மற்றம் இந்தியா இணைந்து ஒழுங்கு செய்துள்ள சர்வதேச சூரியசக்தி ஒருங்கிணைப்பு சங்கத்தின் முதலாவது மாநாட்டில் கலந்து கொள்ளும் நோக்கிலேயே ஜனாதிபதி இந்தியா பயணமாகியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்ஸ் ஜனாதிபதி எமானுவேல் மெக்ரோன் மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் அழைப்பை ஏற்று இந்தியா செல்லும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதனிடையே முப்பது நாடுகளின் அரச தலைவர்களும், 500 இராஜதந்திர மட்டப் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இந்தியாவிலுள்ள பணியாளர்களினால் இலங்கைக்கான வருமானம் அதிகரிப்பு!
இலங்கையில் மலேரியா நோய் மீண்டும் பரவுவதற்கான சாத்தியக்கூறு - சுகாதார அமைச்சு எச்சரிக்கை!
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமனம் - எதிர்ப்பு தெரிவித்து ஆட்சேபனை அடையாள போராட்டம்...
|
|
|


