சரணடைந்தார் ஞானசார தேரர்!

Wednesday, June 21st, 2017

கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் பிரசன்னமாகியுள்ளதாக செய்திகள்  தெரிவிக்கின்றன.

அவர் சட்டத்தரணி ஊடாக இவ்வாறு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். தேசிய பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் வட்டரக்க விஜித தேரரை மிரட்டியமை மற்றும் குரானை அவமதித்ததாக கூறப்படுகின்ற சம்பவம் தொடர்பிலும் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.எனினும் ஞானசார தேரர் இந்த வழக்கில் முன்னிலையாகாமை காரணமாக கடந்த 15 ஆம் திகதி அவரை கைது செய்யுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:


மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே தமது நோக்கம் - நியாயமான விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளவும் அரசாங...
யாழ்ப்பாணத்தை பூர்வீகமாகக் கொண்ட தர்மன் சண்முகரட்ணம் சிங்கப்பூரின் புதிய ஜனாதிபதியாக தெரிவு!
ஜனவரிமுதல் 06 மாதங்களுக்கு வடக்கு ரயில் மார்க்கத்தை நவீனமயப்படுத்த திட்டமிட்ம் - அமைச்சர் பந்துல குண...