சமூக வலைத்தளங்கள் தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை!
Monday, March 12th, 2018
பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான தடை தொடர்பில் விசேட பேச்சுவார்த்தை ஒன்று நடைபெறவுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்றை ஆதாரம் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, கடந்த 7ம் திகதி முதல் தொடர்ந்து இந்த தடை அமுலில் இருக்கிறது.
இதனை நீக்குவது தொடர்பில் அரசாங்கம் இன்னும் எந்த தீர்மானத்தையும் மேற்கொள்ளவில்லை.
இந்தநிலையில், இன்றையதினம் அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள் இந்தவிடயம் குறித்து விசேட கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளனர்.
இதன்போது குறித்த தடையை நீக்குவதா? அல்லது இன்னும் சில தினங்களுக்கு தடையை நீடிப்பதா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
விவசாயிகளுக்கு கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் விசேட செய்தி!
இந்தியா, அமெரிக்காவின் தேவைக்காக வெளிவிவகார கொள்கையை மாற்றியமைக்க முடியாது - நாடாளுமன்ற உறுப்பினர் ...
திருநெல்வேலி விடுதியில் சிறுமியின் சடலம் - பாட்டியால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் அறையிலிருந்து மீட்பு...
|
|
|


