சமூக வலைதளங்களில் வரும் அவமதிப்புகளுக்கு தராதரம் பார்க்காது தண்டனை – ஜனாதிபதி!

Thursday, May 25th, 2017

சமூக வலைதளங்களில் முன்னெடுக்கப்படும் அவமதிப்பு குறித்த சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கும் சட்டமொன்று அவசரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.தவறு யாரு செய்திருந்தாலும் தராதரம் பார்க்காது குறித்த தண்டனை வழங்கப்படும் என குறிப்பிட்ட ஜனாதிபதி இந்தியா, தாய்லாந்து, சீனா ஆகிய நாடுகளில் குறித்த சட்டம் அமுலில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

குறித்த இணையத்தள பகுதியினூடாக சேறு பூசுதல், அவமதித்தல், பொய்ப் பிரசாரங்களை முன்னெடுத்தல் ஆகியவைக்கு குறித்த சட்டம் பொருந்தும் என கூறப்படுகின்றது.சில அரச ஊடகங்களும் அரச கொள்கைகளுக்கு மாற்றமாக நடப்பதாகவும் அவை குறித்தும் அவதானம் செலுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts:


பயன்படுத்திய முகக்கவசங்களை உரிய முறையில் அப்புறப்படுத்துங்கள் - பொதுமக்களிடம் கடல்சார் சூழல் பாதுகாப...
எதிர்வரும் திங்கள்முதல் பேருந்து சேவைகளும் மட்டுப்படுத்தப்படும் - தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்...
அமைச்சு பதவிகளை ஏற்காமல் நாட்டை கட்டியெழுப்ப அரசாங்கத்துக்கு ஆதரவு - நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன...