சமூகவலைத் தளங்களுக்கு மட்டுப்பாடு அவசியம் – நீதியரசர்கள்தெரிவிப்பு!

Thursday, June 7th, 2018

சமூக ஊடகங்களின் பயன்பாட்டுக்குமட்டுப்பாடுகள்அவசியம்.  இவ்வாhறுஇலங்கை, இந்தியநீதியரசர்கள்தெரிவித்தனர். சமூகஊடகங்களுக்கு ஓர்கட்டுப்பாடுவேண்டுமா? ஒருஉலகளாவியபார்வைஎன்றகருப்பொருளின்அடிப்படையில்இலங்கைசட்டத்தரணிகள் சங்கம்மற்றும் இலங்கை பத்திரிகைநிறுவனம் இணைந்துஏற்பாடுசெய்திருந்தகலந்துரையாடல்நேற்றுமுன்தினம்இடம்பெற்றிருந்தது.

இந்தநிகழ்வில்இந்தியஉயர்நீதிமன்றநீதியரசர்ஜஸ்டிசெலமேஸ்வர்தெரிவித்ததாவது:

சமூகஊடகங்களின்பயன்பாடு, அரசமைப்பில்எண்ணத்தைவெளிப்படுத்தும்உரிமைக்குட்பட்டவகையில்காணப்படுகின்றது.  சமூக ஊடகங்கள் தவறானகைகளின்பயன்பாட்டின் கீழ்வரும்போதுதவறாகப்பயன்படுத்தப்படுகின்றன.

சிறப்புச்சட்டவரைவுகளும்விதிமுறைகளும்இவற்றைக்கட்டுப்படுத்தநடைமுறைப்படுத்தப்படல்வேண்டும். பேச்சுச்சுதந்திரம்உலகில்அனைவருக்கும்வழங்கப்பட்டது. அதற்காகஎல்லாவற்றையும்பேசிவிடமுடியாது. பேச்சுச்சுதந்திரமும் பொதுநலன் கருதிசிலசந்தர்ப்பங்களில் மட்டுப்படுத்தப்படும். சமூகஊடகங்களிலும் சிலமட்டுப்பாடுகள் கொண்டுவருவது எதிர்கால இலத்திரனியல்மயப்படுத்தப்பட்டஉலகுக்குசிறந்ததாகும்என்றார்.

இலங்கைமேன்முறையீட்டுநீதிமன்றநீதியரசர்எஸ்.துரைராஜாஇந்தநிகழ்வில்தெரிவித்ததாவது:

சமூகஊடகங்களைநாட்டில்பல்வேறுதரப்பினர்பயன்படுத்துகின்றனர். சமூகஊடகம்என்றால்என்னஎன்று அறியாமலேபலர் பயனாளர்களாக இருக்கின்றார்கள். சமூக ஊடகங்களில் தாமும் செல்வாக்குச்செலுத்துகின் றோம் என்ற எண்ணப் போக்கைகணினி, தொலைபேசி, இணையம்போன்றவற்றின்பயன்பாடேவழங்கியுள்ளது. இதுமுற்றிலும்தவறாகும்.

சமூகஊடகம்என்பதுதனியார்தொடர்புசாதனமாகும்.

இன்றையஉலகில்அதுபலரின்கண்காணிப்புகளுக்குஉட்படுத்தப்படுகின்றது. சமூகஊடகங்கள்வாயிலாக எம்மையே நாம்வரி செலுத்தாமல்சந்தைப்படுத்துகின்றோம்.

சமூகஊடகங்களில் ஓர்கட்டுக்கோப்பு காணப்படாமையால் சிலபுல்லுருவிகள் எமது சொந்ததகவல்களைப்பலபில்லியன் ரூபாபெறுமதிக்குவிற்பனை செய்கின்றனர்.

எதிர்வரும்காலங்களில் சமூகஊடகங்கள், சமூகவலைத்தளங்கள் பயனாளிகளைக் கொண்ட உரியநாடுகளில் சட்டப்பதிவு செய்யப்படல் கட்டாயமாக்கப்படலும் அவசியமாகும்என்றார்.

Related posts: