சட்டம் ஒழுங்குகள் பட்டியலில் இலங்கை முன்னேற்றம்!
Friday, February 2nd, 2018
சட்ட ஒழுங்குகள் தொடர்பான சர்வதேச நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளது.
113 நாடுகளுக்கு மத்தியில் நடத்தப்பட்ட கணிப்பீடுகளின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் இலங்கை 59 ஆம் இடத்தில் உள்ளது.
முன்னைய பட்டியலைக் காட்டிலும் இலங்கை 9 இடங்களில் முன்னேறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இலங்கை, தெற்காசிய நாடுகளில் சட்ட ஒழுங்குகளை பேணும் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிக்கான உலக வேலைத்திட்டம் இந்தப் பட்டியலைத் தயாரித்துள்ளது.
Related posts:
புதிய தேர்தல் முறை: சிறுபான்மையினருக்கு அநீதி ஏற்படாது - உள்ளூராட்சி சபைகள் அமைச்சர்!
நடுத்தர வருமானம் பெருவோருக்கு நிரந்தர வீடுகள் நிர்மாணிக்க அரச அபிவிருத்தி, நிர்மாணத்துறை கூட்டுத்தா...
நஞ்சற்ற விவசாய முயற்சியில் யாழ். பல்கலைக்கழக பட்டதாரிகள்!
|
|
|


