க.பொ.த சாதாரண தரம் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்
Wednesday, January 24th, 2018
கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி இன்று 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
இவ்விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி நாடு முழுவதும் ஒதுக்கப்பட்ட மதிப்பீட்டு நிலையங்களில் நடைபெறவுள்ளது.
ஏற்கனவே முதலாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப்பணி கடந்த 3 ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிக்கான கடிதங்கள் உரிய ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியில் தமிழ் இலக்கிய நயம், இரண்டாம் மொழி தமிழ், இரண்டாம் மொழி சிங்களம் உள்ளிட்ட சில பாடங்களுக்கான மதிப்பீட்டுப் பணிகளே நடைபெறவுள்ளன.
Related posts:
தண்டம் செலுத்த மறுக்கும் இங்கிலாந்து!
இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார். ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர...
2024 ஆம் ஆண்டில் 312,836 பேர் தொழில் வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு பயணம்!
|
|
|


