கொரோனா தொற்று: இந்தியாவில் தொற்றாளர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தை கடந்தது!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது. குறித்த தகவலின்படி இதுவரை இந்தியாவில் 6,725 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
கடைசி 12 மணி நேரத்தில் மட்டும் 547 பேருக்கு கொரோனா இருப்பது தெரியவந்துள்ளது என்று அந்த அமைச்சகம் கூறியுள்ளது.
இதனிடையே கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையும் 119 ஆக அதிகரித்துள்ளதுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
அச்சப்பட வேண்டாம்: பாரீஸ் பொலிஸ் அவசர அறிவிப்பு!
கல்வி நிர்வாக சேவை அதிகாரிகளின் அதிகாரப் போட்டிகளால் கல்வி பாழடைகின்றது - தமிழர் ஆசிரியர் சங்கம் விச...
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு பொலிஸ் பாதுகாப்பா? – வெட்கக்கேடு என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன...
|
|