அச்சப்பட வேண்டாம்: பாரீஸ் பொலிஸ் அவசர அறிவிப்பு!

Saturday, April 8th, 2017

பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பல ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தி சினிமா படப்பிடிப்பு நடைபெற உள்ளதால் குடிமக்கள் அச்சப்பட வேண்டாம் என பொலிசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

பாரீஸ் நகர பொலிசார் சமூக வலைத்தளத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.அதில், ‘வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய இரண்டு நாட்களில் பாரீஸ் மீது ஹெலிகொப்டர்கள் பறக்கும்.

பிரபல ஹாலிவுட் நடிகரான டாம் க்ரூஸ் நடித்து வரும் Mission Impossible 6 படத்தின் சில காட்சிகள் பாரீஸில் எடுக்கப்பட உள்ளதால் இந்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.எனவே, இந்த இரண்டு தினங்களில் வழக்கத்திற்காக மாறாக ஹெலிகொப்டர்கள் பறந்தால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என பொலிசார் அறிவித்துள்ளனர்.பாரீஸ் நகரில் நடைபெறவுள்ள இந்த படப்பிடிப்பிற்காக நடிகர் டாம் க்ரூஸ் 35 நாட்கள் பாரீஸில் தங்குகிறார். இந்த படிப்பிடிப்பின் அனுமதிக்காக சுமார் 25 மில்லியன் டொலரை படக்குழுவினர் வழங்கியுள்ளனர்.

இதுமட்டுமில்லாமல், சண்டைக்காட்சிகளில் நடிப்பதற்காக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 300 கலைஞர்கள் இப்படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளனர்.சர்வதேச அளவில் பலத்த எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்தியுள்ள இப்படம் அடுத்தாண்டு யூலை மாதம் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts: