கூட்டு எதிரணியில் இருந்து விலகிய முக்கியஸ்தர்

Monday, May 8th, 2017

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும்  கூட்டு எதிர்க் கட்சியில்  செயல்படுபவருமான நாடாளு மன்ற உறுப்பினர் கஞ்சன விஜேசேகர,  கூட்டு எதிர்கட்சியின் மற்றொரு அரசியல்வாதியுடனான மோதல் காரணமாக அந்த அணியில் இருந்து விலகியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மகிந்த விஜேசேகரவின் மகனான கஞ்சன விஜேசேகர, கடந்த வாரம் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சி மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் முக்கியமாக செயல்பட்டவர் எனத் தேரிவிக்கப் படுகிறது,

தான் அரசாங்கத்தில் சேர மாட்டார் எனவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமைக்கு  ஆதரவளிக்கும் ஸ்ரீ.ல.சு.க. குழுவுடன்  இணைந்து செயல்பட உள்ளதாகவும்  விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட காரணங்களாலேயே  கூட்டு எதிரணியின்  நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts: