குற்றங்களை புரிவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது!

Tuesday, July 25th, 2017

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனை வழங்குவதால் படையினர் எவ்வாறு பாதிக்கப்படுவர் என்று காணி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைக்குறிப்பிட்டார்.சீருடையில் மறைந்திருந்து குற்றங்களை புரிவதற்கு எவருக்கும் இடமளிக்க முடியாது என்று தெரிவித்த அமைச்சர் இதனை சிலர் படையினரை பலிக்காடாவாக்கும் செயல் என்று விமர்சிக்கின்றனர்.

இது முற்றிலும் அரசியல் இலாபம் தேடும் பிரசாரம் என்றும் தெரிவித்தார். இராணுவத்தினர் குறித்து கருத்தத் தெரிவிப்பவர்கள் இராணுவத்திற்காக பெரும் சேவை ஆற்றிய மேஜர் ஜெனரல் ஜானக பெரேராவுக்கு உரிய பாதுகாப்பபை வழங்கவில்லை. பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்க தியாகத்துடன் பணிபுரிந்த சரத் பொன்சேகா அரசியலுக்கு பிரவேசித்தபோது அவருக்கு மரியாதை அளித்த விதத்தை மறந்துவிட முடியாது என்றும் காணி மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் கயந்த கருணாதிலக மேலும் தெரிவித்தார்.

Related posts: