உணவு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லை – விவசாய பணிப்பாளர் நாயகம் அஜந்த டி சில்வா அறிவிப்பு!

Friday, December 31st, 2021

நாட்டில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என அச்சம் கொள்ள தேவையில்லையென விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரதான உணவாக சோறு உட்கொள்ளப்படுவதால், அடுத்த வருடத்தில் பெரும்பாலும் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என சிலர் கணிப்புகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

எவ்வாறாயினும், சிறுபோகத்திற்காக 5 இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட நெற்பயிர் செய்கையில் கிடைக்கப்பெற்ற விளைச்சல் 6 மாத காலத்திற்கு போதுமானதாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், பெரும்போகத்தில் தற்போது 7 இலட்சத்திற்கும் அதிக நிலப்பரப்பில் நெற்பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் விளைச்சல் உரத்தட்டுப்பாடு காரணமாக பாதிக்கப்பட்டிருப்பினும், நாட்டின் நுகர்வுக்கு போதுமானதாக உள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே

நாட்டு மக்கள் பட்டினியால் வாடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹம்பேகமுவ சதொசவை திறந்து வைத்ததன் பின்னர் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மக்கள் பட்டினி கிடக்காமல் இருப்பதற்கான பொறுப்பை அமைச்சர்கள் தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதால், இந்த நாட்டில் உள்ள மக்களை பட்டினி கிடக்க அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts:

இலங்கையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் பாடசாலைகளை திறக்க முடியும் - ரிஜ்வே சிறுவர் வைத்தியசா...
ஐ.நா பொதுச் செயலாளர் - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச விசேட சந்திப்பு - உள்ளகப் பொறிமுறையூடாகப் பிரச்சினைக...
உத்தேச நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலம் தொடர்பில் நாளை மற்றும் நாளைமறுதினம் நாடாளுமன்றத்தில் விவாதம்!