இலங்கையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் பாடசாலைகளை திறக்க முடியும் – ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்தியர் சன்ன தெரிவிப்பு!.

Sunday, September 5th, 2021

அடுத்த வாரத்திற்குள், கோவிட் தொற்றுக்கு எதிரான இரண்டாவது தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பின்னர், ஆசிரியர்கள் தங்கள் கற்பித்தல் பணிகளை ஆரம்பிக்க வேண்டும் என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன கேட்டுள்ளார்.

ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான தடுப்பூசி இயக்கம், அடுத்த வாரத்தில் முடிவடைகிறது. இந்தநிலையில் பெரும்பாலான ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது அளவு வழங்கப்பட்டுள்ளதாக தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனினும், சுகாதார அமைச்சின் பரிந்துரை கிடைக்கும் வரை, பாடசாலைகளை மீண்டும் திறக்க திடீர் முடிவை எடுக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்புக்காக ஒரு விரிவானத் திட்டம் அவசியம்.

இதேவேளை இரண்டாவது, தடுப்பூசி அளவுக்கு பிறகு ஆசிரியர்கள், அதிபர்கள் தங்கள் செயல்பாடுகளை இணையத்தின் ஊடாக தொடரலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

இலங்கையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் பாடசாலைகளை திறக்க முடியும் என ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய் தொடர்பான விசேட வைத்தியர் சன்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொரோனா பரிசோதனைகள் குறைவாக மேற்கொள்வதன் காரணமாகவே தொற்றாளர்கள் குறைவடைந்துள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளது.

சில வெளிநாடுகளில் செயற்படுத்தப்படும் முறையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தாமல் பாடசாலைகளை ஆரம்பிக்க முடியும் என விசேட வைத்தியர் சன்ன குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடுகளில் முறையை இலங்கையில் பயன்படுத்தினால் எவ்வித தடையுமின்றி பாடசாலைகளை திறக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.இது இவ்வாறிருக்க

கொரோனாத் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரம், க.பொ.த சாதாரண தரம் மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்கான தற்காலிகமாக முன்மொழியப்பட்ட திகதிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை  எதிர்வரும் 2021  ஆண்டு நவம்பர் 14 திகதியும் க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் 2021 நவம்பர் மாதம் 15 ஆம் திகதிமுதல் டிசம்பர் 10 ஆம் திகதிவரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

அத்துர்டன் க.பொ.த சாதாரண பரீட்சை எதிர்வரும் 2022 பெப்ரவரி 21 ஆம் திகதிமுதல் மார்ச் 03 ஆம் திகதிவரை நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் இவை தற்போது முன்மொழியப்பட்ட திகதிகளே என்றும் சுட்டிக்காட்டியுள்ள கல்வி அமைச்சு எனினும் நாட்டு சூழ்நிலைகளை பரிசீலித்த பின்னர் இது மாறலாம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


இலங்கையில் மூன்று புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க ஏற்பாடு - பெற்ரோலிய கூட்டுத்தாபனம்!
தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் ஆபத்தான நிலைகை்கு செல்ல கூடும் - கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வி...
இலங்கையில் மாதாந்த எரிபொருள் பாவனை 50 வீதத்தால் வீழ்ச்சி - பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு!