குப்பைகளை அகற்றும் அதிகாரமும் மாகாண சபைக்கு – அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க
Tuesday, June 27th, 2017
கழிவு பொருட்களை முகாமைப்படுத்துதல் குறித்து தமது அமைச்சுக்கு எந்தவொரு பொறுப்பும் இல்லையென மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டாளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.பிரதேச சபைகளும் நகர மற்றும் மாநகர சபைகளும் தற்போது இயங்குவதில்லை.
எனவே குப்பைகளை அகற்றுவது தொடர்பான மொத்த அதிகாரமும் மாகாண சபையின் கீழ் சென்றுள்ளது. இந்த நிலையில் குப்பைகளை அகற்றுவது தொடர்பான சிக்கல்களுக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுநர் ஆகியோரே நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாட்டாளி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளின் நீளத்தைக் குறைக்க நடவடிக்கை!
யாழில் விடுதிகள் திடீர் சுற்றிவளைப்பு - சமூகப் பிறழ்வான நடத்தைகளில் ஈடுபட்டதாக கருதப்படும் பலருக்கு ...
இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக டபிள்யூ.கே.டி...
|
|
|


