கிளிநொச்சி நீர்த்தாங்கி அகற்றப்படுகின்றது!

Wednesday, March 28th, 2018

கிளிநொச்சியில் யுத்த அழிவுகளை பறை சாற்றும் வகையில் அரசாங்கத்தால் காட்சிப்படுத்தப் பட்டு வந்த வீழ்ந்த நிலையிலான நீர்த் தாங்கியை அகற்றும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன நிர்த்தாங்கி அமைந்திருந்த நாற்பது பேர்ச் காணியில் புதிதாக கட்டிடமொன்றை அமைக்கும்நோக்கில் நீர்த்தாங்கியை உடைத்து அழிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

கிளிநொச்சி நகரிற்கு குடி நீர் வழங்குவதற்காக நிறுவப்பட்டிருந்த இந்  நீர்த்தாங்கி  யுத்த காலத்தில் இரண்டு தடவைகள் நிர்மூலமாக்கப்பட்டது கடந்த 2000 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் வீழ்த்தப்பட்டிருந்ததுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்த் தாங்கியும் இறுதி யுத்தத்தின் போது வீழ்த்தப்பட்டிருந்தது இந் நிலையில் குறித்த நிர்த் தாங்கியானது  யுத்தம் முடிவுற்றதன் பின்னர் யுத்த ஞாபக சின்னமாக காட்சிப்படுத்தப் பட்டிருந்தது

வீழ்ந்த நிலையிலான நீர்த்தாங்கி மற்றும் நீர்த்தாங்கி அமைந்துள்ள காணி என்பன இராணுவ கட்டுப்பாட்டில் இருந்து வந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதி அவை விடுவிக்கப்பட்டு கரைச்சி பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது யுத்தத்தின் சான்றாக காணப்படும் இந் நீர்த்தாங்கியை தென்னிலங்கை மக்களும் வெளிநாட்டவர்களும் ஆர்வத்துடன் பர்வையிட்டு வந்த நிலையில் தற்போது அதனை அகற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: