காணாமல் போன கப்பல்களை தேடும் நடவடிக்கையில் சுற்றுலா பயணிகளை ஈடுபடுத்துவது குறித்து பரிசீலனை!
Monday, December 11th, 2017
கடலில் மூழ்கி காணாமல் போன கப்பல்களை தேடும் நடவடிக்கைகளில் சுற்றுலா பயணிகளை ஈடுபடுத்துவது குறித்து இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகம் பரிசீலித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பணியகத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து ஆழ்கடலில் காணாமல்போன கப்பல்களை தேட முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ரீதியாக கப்பல்கள் மூழ்கும் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், சுற்றுலா பயணிகளை தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.இப்படியான தீரம் மிக்க பணிகளில் ஈடுபட பல சுற்றுலாப் பயணிகள் முன்வருவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related posts:
லீசிங் வாகனத்தை இனிமேல் நினைத்தபடி தூக்க முடியாது - புதிய சுற்றறிக்கையை வெளியிட்டார் பொலிஸ் மாஅதிபர்...
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு - ஒரு வயது குழந்தை உயிரிழப்பு!
திருநெல்வேலி விடுதியில் சிறுமியின் சடலம் - பாட்டியால் எழுதப்பட்ட கடிதம் ஒன்றும் அறையிலிருந்து மீட்பு...
|
|
|


